புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இன்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 34,336 ஆக உயர்ந்துள்ளது. 29,990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 588 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.