நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி நான்காவது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு 300 க்கும் கீழ் குறைந்தது. மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,15,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 1,10,432 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.