புதுச்சேரி சுற்றுலா துறை மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் ஜார்ஜ் மரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் கடற்கரை சாலையில் உள்ள Le Cafe ரூ.5 லட்சம் செலவில் முழுமையாக புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. பொது மக்களுக்கு பரிட்சமான இந்த Le Cafe தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த Le kafe புதுப்பிக்கும் பணி முடிவடையும் வரை இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் PTDC இன் மற்ற பிரிவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து கடற்கரையில் உள்ள சீகல்ஸ் உணவகங்கள் மற்றும் சுண்ணாம்புபார் படகு இல்லம் உணவு மற்றும் பானங்களுக்காக 24×7 செயல்படும் என்றும் மதுபானம் மட்டும் அரசாங்க வழிகாட்டுதல்படி செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் சுண்ணாம்பார் படகு இல்லத்தில் நீர் விளையாட்டு நடவடிக்கைகள் காலை 5 மணி முதல் செயல்படும். சூரிய உதயத்தை காணும் வகையில் இயக்கப்படும் படகு சவாரி சேவை காலை 5.30 மணிக்கு தொடங்கப்படும். மேலும் சுண்ணாம்பு படகு இல்லத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.