Categories
கொரோனா தடுப்பு மருந்து மாநில செய்திகள்

புதுச்சேரியில் நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின்  தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரி முழுவதும் உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து வரும் 14ம் தேதி வரையிலான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. பாக்கம்உடையான்பட்டு அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது காலையிலிருந்து தடுப்பூசி திருவிழாவிற்கு மிக நல்ல ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், எதை நினைத்து இந்த 100 இடங்களில் ஏற்பாடு செய்தோமோ அதே மாதிரி அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அந்தந்த பகுதி பள்ளிகளிலிருந்து அவர்கள் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |