தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 19 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை காரணமாக இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை புதுச்சேரி பள்ளிகள் திறப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.