Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் போட்டியின்றி எம்.பி ஆகிறார் செல்வகணபதி!!

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகிறார்.

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி போட்டியிடுவார் என
நேற்று அறிவிக்கப்பட்டது.. என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே வேட்பாளரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று செல்வகணபதி அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் செல்வகணபதி.. கடைசி நாளான இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் செல்வகணபதி போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகிறார்.

புதுச்சேரியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது பாஜகவின் நியமன எம்.எல்ஏ வாக இருந்தார் செல்வகணபதி என்பது குறிப்பிடத்தக்கது..

 

Categories

Tech |