Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர்…. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு….!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகின்றது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டமாக இது அமைவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்க்கான திட்ட வரையறைகள், மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையிலான புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |