Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் முழு ஊரடங்கு…? – வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் துணைநிலை ஆளுநர் அவசர தமிழிசை சௌந்தர்ராஜன் ஆலோசனை நடத்தி புதுச்சேரியில் இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் திங்கள் கிழமை வரை நீட்டிக்கப்படுவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதை காரணமாக வைத்து அவசியமின்றி பொதுமக்கள் சாலைக்கு வர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |