நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் துணைநிலை ஆளுநர் அவசர தமிழிசை சௌந்தர்ராஜன் ஆலோசனை நடத்தி புதுச்சேரியில் இரவு ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரியில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளை தவிர பிற கடைகளை மே-3 ஆம் தேதி வரை திறக்கக் கூடாது என கூறியுள்ளார்.