புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பை ஏற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.