புதுச்சேரி வரலாற்றில் முதல்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழில் நேற்று காலை பட்ஜெட் உரையாற்றினார். இதனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதித்துறையில் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். 2021- 2022 ஆம் வருடத்துக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்து உரையாற்றினார்.
இந்த உரையில், பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அந்தவகையில் புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய், தானியங்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் மூடப்பட்டிருக்கும் ரேஷன் கடைகள் மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு இலவச அரிசி வழங்க 197.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடுகள் வாங்க தேசியமயமாக்க வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.