தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் அக்டோபர் 21, 25 மற்றும் 28ம் தேதி என மூன்று கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காரைக்கால், மாஹே, ஏனாம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 21-ஆம் தேதியும், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 25-ஆம் தேதியும், புதுச்சேரியில் உள்ள மற்ற அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளில் அக்டோபர் 28ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.