புதுச்சேரியில் ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
புதுச்சேரியில் வார்ட் மறு வரையரை பணிகளை முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி அனந்த லட்சுமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரியில் வார்ட் மறுவரையறை பணிகளை விரைந்து முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததைக் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அசோக் குமார் என்ற வழக்கறிஞர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களில் வார்ட் மறுவறை பணிகளை முடித்து அதிலிருந்து நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையர் க்கு உத்தரவிட்டுள்ளது .