Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கு …. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கான விலைப்படி உயர்வு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவித்து கடந்த 8 ம் தேதி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழலில் புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தை 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 34% ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. இதற்கான உத்தரவை புதுவை அரசின் நீதித்துறை சார்பு செயலாளர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார் இந்த நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அமலுக்கு வருகின்றது. மேலும் இது தொடர்பான உத்தரவு  அரசு சார்பு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பகுதி நிர்வாக தலைமை அதிகாரிகளுக்கும் அகவிலைப்படி உயர்வு பற்றிய விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |