Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் திடீர் மாற்றம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநில தலைமை செயலாளர் அஸ்வினி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வரும் ராஜீவ் சர்மா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளராக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அஸ்வினி குமாரர் ஐஐஎஸ் பணியாற்றி வருகின்றார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை மத்திய அரசு வழக்கமாக வைத்துள்ளது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அஸ்வினி குமார் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இதற்குப் பின்னால் பாஜகவின் திட்டம் உள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில்புதுச்சேரி மாநிலத்தில் அரசின் திட்டங்களுக்கு அஸ்வினி குமார் அனுமதி வழங்காமல் தடையாக இருப்பதாக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதனால் தலைமைச் செயலரை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதினார். இதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் திடீரென டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாச்சல பிரதேச ஆயிரத்தில் பணியாற்றிவரும் ராஜீவ் சர்மா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வரும் நிலையில் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |