Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரும் வழியில்… மர்ம காரால் பெரும் பரபரப்பு…!!!!

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிவிபத்து நாள்தோறும் புதிய தகவல்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது. இதற்கிடையே  கார் சிலிண்டர்  வெடிவிபத்து அரசியலாக்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக சார்பில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி கோவையில் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா பற்றியும் அவரது கூட்டாளிகள் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

இதன் பின்னணியில் மிகப்பெரிய சக்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி கோவை வெடி விபத்தில் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து NIA விற்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை வந்துள்ளார். அப்போது அவர் வரும் வழியில் வழக்கம் போல் போலீஸ் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சாலை பகுதியின் சாலை ஓரத்தில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து அந்த கார் முழுவதும் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த காரில் வெடிகுண்டுகளோ, பொருட்களோ எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. அதன் பின் கார் உரிமையாளர் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் இருந்த கார் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த கார் உரிமையாளர் அந்த பகுதியில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் ஊழியர் என்பதும் ஒரு வேலையாக காரை நிறுத்திவிட்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்திய சம்பவம் கோவை அண்ணாசாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |