Categories
மாநில செய்திகள்

புதுச்சேரி தவிர்த்து… பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பாஸ் கட்டாயம்… தமிழக அரசு அதிரடி..!!

புதுச்சேரி மாநிலத்தை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் 26 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதில் ஏராளமான கட்டுப்பாடுகளையும் கொண்டுவந்துள்ளது. இதைதொடர்ந்து புதுச்சேரி மாநிலங்களில் இருந்து வருபவர்களை தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் இ பாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அறிவித்துள்ளது.

Categories

Tech |