Categories
அரசியல் மாநில செய்திகள்

புதுச்சேரி தொகுதிகள் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழகம் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதையடுத்து இன்று புதுச்சேரியில்  பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி உருளையன்பேட்டை- எஸ்.கோபால், உப்பளம் – வி.அனிபால் கென்னடி, மங்கலம்- சண்முகவேல், முதலியார்பேட்டை- சம்பத் ,வில்லியனூர் – ஆர். சிவா, நெல்லிதோப்பு -வி.கார்த்திகேயன், ராஜ்பவன்- எஸ்.பி சிவக்குமார், மண்ணடிப்பட்டு – ஏ.கிருஷ்ணன், திருப்பு முனை- ஏ.முகிலன், காரைக்கால் -தெற்கு ஏ.எம்.ஹெச் நாஜிம், நிரவி திருப்பட்டினம் – நாக தியாகராஜன், பாகூர் தொகுதிக்கு வேட்பாளர் பின்னர் அறிவிப்பு.

Categories

Tech |