புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற 14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு விடுமுறைஅளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இதனை ஆதரித்து அரசு ஏப்ரல் 16ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி 18ஆம் தேதி வரை நான்கு நாள் விடுமுறை அளித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.