புதுச்சேரி மாநிலத்தின் சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கின்றது. கொரோனா விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் விவாதித்ததனர். இந்த நோய் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து உறுப்பினர்களும் பேசினர். இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசிடம் கேட்ட நிதி கிடைக்கவில்லை… இருந்தபோதிலும் அரசின் வருவாயை கொடுத்து உரிய நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒவ்வொருக்கும் ரூபாய் 700 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்படும். இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 34 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பும் வெளியிட்டார். புதுவையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும், காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தால் 5 லட்சம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.