Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்இன்று  நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் உட்பட நிர்வாகிகள் பதவியேற்பு விழா காலை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போதைய அதிமுக அவைத் தலைவருமான வழக்கறிஞர் பரசுராமன்(72) விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பரசுராமனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். எனவே உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரசுராமன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |