பெங்களூரு துமகூரு ரோட்டில் சர்வதேச கண்காட்சி அரங்கம் அமைந்துள்ளது. அதில் லகு உத்தியோக பாரதி என்னும் பெயரில் இந்திய உற்பத்தி கண்காட்சி மாநாடு தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தொடக்க விழாவில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம். மேலும் நாங்கள் விரைவில் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியை தொடங்க உள்ளோம் இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 1.30 லட்சம் கோடிக்கு தனியார் நிறுவன முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கின்றோம். எரிபொருள் சூரிய சக்தி மின் உற்பத்தி ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்வோம்.
மேலும் கடல் நீரிலிருந்து அமோனியாவை உற்பத்தி செய்யப் போகின்றோம் இது எங்கள் உற்பத்தி திட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது. கர்நாடக எடுக்கும் முயற்சிகளை பிற மாநிலங்களில் பின்தொடர்கிறது. அதாவது கர்நாடக அரசு தொழில் முனைவோர் ஆராய்ச்சி வளர்ச்சி திறன் நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கின்றது. அந்த நிறுவனங்களுக்கு அரசு தன்னால் என்ன செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்து வருகின்றது. மேலும் நிறுவனங்களுக்கு உற்பத்தியை பொறுத்து ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் அரசு செயல்படுத்தி இருக்கிறது. தற்போது நமது ராணுவத்திற்கு தேவையான உபகரணங்கள் தளவாடங்கள் தேவையில் 60 சதவீதத்தை நாமே உற்பத்தி செய்கின்றோம். நமது தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள ஒரு வலுவான ஆராய்ச்சி வளர்ச்சி நிலை தேவை. இந்த நிலையில் தற்போது நாம் அந்த இலக்கை அடைவதை நோக்கி பயணம் மேற்கொண்டு வரும் நாட்களில் 90% ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்யும் நிலை வரும்.
மேலும் இந்திய ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் தன்மையிலிருந்து அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறி இருக்கிறோம் இந்த மாற்றம் தற்போது நிகழ்ந்து வருகின்றது. இந்தியாவிற்கு திறன் உள்ளது என்பதை இது வெளிப்படுத்துகிறது. நமது திறனை நாம் வெளியே கொண்டு வர வேண்டும். அதனை பயன்படுத்தி நாம் அதற்கான பயனை அறுவடை செய்ய வேண்டும் திறமைகளை நாம் அங்கீகரிக்க வேண்டும். மேலும் இது மாற்றத்திற்கான காலம் நமது மாற்றத்தை நோக்கி முன்னேறி செல்கின்றோம். இந்த நேரத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கர்நாடகாவில் இருந்து தொழில் முதலீடுகளுக்கான சூழல் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இங்கு ஆராய்ச்சி வளர்ச்சிக்கான தேவையான நல்ல கொள்கைகள் அமலில் உள்ளது. உள்ளூர் இளைஞர்களை முதலீட்டாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கினால் அதிக அளவில் சலுகைகளை வழங்குகின்றோம். மேலும் கர்நாடக அரசு வருகின்ற நவம்பர் இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை உலக முதலீட்டாளர்களை மாநாட்டை பெங்களூரில் நடத்துகின்றது. இது தொழில் முதலீட்டாளர்கள் பங்கேற்று இதை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.