மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் கூலித் தொழிலாளியான பசப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி ராஜம்மாள் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் பசப்பா கணவரை பிரிந்து வாழ்ந்த மாதேவம்மா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தை மீது பசப்பாவிற்கு சந்தேகப்பட்டால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பசப்பா வீட்டில் இருந்த கத்தியால் மாதேவம்மாவின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காட்டுப் பகுதியில் பசப்பா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பசப்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். கணவன் மனைவி இருவரின் சடலங்கள் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.