Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதுப்பெண் தற்கொலை…. அச்சத்தில் விஷம் குடித்த கணவர்…. தென்காசியில் பரபரப்பு சம்பவம்…!!

புதுமண தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான்பட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரிய மிக்கேல்(29) என்ற மகனும் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மிக்கேலுக்கு சிங்கம்பாறை பகுதியைச் சேர்ந்த பேபி ஜான்சிராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கிறிஸ்தவ ஆலய விழாவில் மிக்கேல் மது அருந்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை ஜான்சிராணி கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கடைக்கு சென்று இறைச்சி வாங்கி வந்த மிக்கேல் மீண்டும் மது அருந்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மிக்கேல் ஜான்சி ராணியை தாக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜான்சி ராணி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜான்சிராணியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ஜான்சிராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மிக்கேலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் அம்பை அருகே காட்டுப்பகுதியில் பாறைகளுக்கு அருகில் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சடலமாகக் கிடப்பது மிக்கேல் என்பது தெரியவந்துள்ளது. அதாவது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் காவல்துறையினர் தன்னை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மிக்கேல் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |