Categories
மாவட்ட செய்திகள்

புதுப்பெண் தற்கொலை… காரணம் தெரியாத உறவினர்கள்… போலீஸ் விசாரணை….!!

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசி அடுத்துள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் அச்சக தொழிலாளி ரெங்கராஜ். இவரது மனைவி ராஜலட்சுமி. இருவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. இந் நிலையில் புதுப்பெண் ராஜலட்சுமி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.

இதனை  அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  தகவல் அறிந்த சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |