புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
சென்ற 2006ம் வருடம் வெளியான புதுப்பேட்டை திரைப்படம் மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கின்றது. இத்திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறினாராம். காரணம் என்னவென்றால், உடல்வாகும் தோற்றமும் எப்படி பார்த்தாலும் டான் போல இல்லை. இதனால் நடிக்க மாட்டேன் என கூறினாராம். செல்வராகவன் தனுஷிடம் எவ்வளவு கூறியும் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்த நிலையில் செல்வராகவனுடன் பணியாற்றிய பாலகுமாரன் தனுஷிடம் இத்திரைப்படம் உங்களுக்கு சரியாக இருக்கும். உருவத்தை வைத்து எடை போடாதீர்கள் என கூறிய பிறகு ஒப்புக்கொண்டாராம் குறிப்பிடத்தக்கது.