Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மேம்பாலம்…. போலீசாரின் சிறப்பான முயற்சி…!!

காவல்துறையினரின் முயற்சியால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் இருக்கும் சுற்றுச்சுவர் பகுதிகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பொலிவிழந்து காணப்பட்ட மேம்பாலத்தை மாற்றுவதற்கு தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி மேம்பால சுவர்களில் பல்வேறு வண்ணங்களை பூசி, மனதை கவரும் வகையில் வாசகங்களை எழுதி அழகு படுத்தியுள்ளனர். இதனால் ரயில்வே மேம்பாலம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் மேம்பாலத்தை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |