Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடூரம்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தநகரில் வசித்து வருபவர் பழனிசாமி. இவருடைய மகன் பிரபாகரன்(26) தனியார் வங்கி ஊழியராக இருந்துள்ளார். இவருடைய மனைவி தென்றல் தேன்மொழி. இவர்கள் காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 15 தினங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பிரபாகரனின் நண்பரான சூர்யாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட சென்றுள்ளார். அதன்பின் அன்று இரவு தனது நண்பர்களான கார்த்திக், வினோத் கண்ணன், சோமசுந்தரம் ஆகியோருடன் அனுமந்த நகரில் வைத்து பிரபாகரன் மது அருந்தினார்.

இதை போன்று ஜம்புளியம்பட்டியில் வசித்த ராஜ்குமார், அவரது நண்பருடன் அந்த பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ராஜ்குமார், தனது நண்பர்களுடன் இணைந்து  பிரபாகரன் தலை, கழுத்தில் கத்தியால் குத்தினார்கள். இதனை  தடுத்த கார்த்திக், வினோத் கண்ணன் ஆகியோருக்கும் கத்தி குத்து பட்டது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரபாகரன் உயிரிழந்ததாக கூறினார்கள். மேலும் கார்த்திக், வினோத் கண்ணன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் தாலுகா காவல் துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.

அதில் புளியம்பட்டியில் வசித்த 19 வயது உடைய ராஜ்குமார், ஏர்போர்ட் நகரில் வசித்த 21 வயதுடைய ராஜேஸ்வரன், 27 வயதுடைய கரண் குமார், பெரியபள்ளபட்டியில் வசித்த 21 வயதுடைய ஸ்ரீதர் மற்றும் 22 வயதுடைய ரஞ்சித் ஆகியோரை கைது செய்துள்ளனர் . அதன்பிறகு கைதானவர்களிடம்  காவல்துறையினரிடம்  விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் திடுகிடும் தகவல் வெளியானது. அதாவது, உயிரிழந்த பிரபாகரனுக்கும், ராஜ்குமாருக்கும்  மற்றும் அவரது நண்பர்களுக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து  பிரபாகரன் ராஜ்குமாரின் செல்போனிற்கு பலமுறை தொடர்பு கொண்டு பேசி நான்  இந்த இடத்தில் இருக்கேன். நீ ஆம்பளையா இருந்தா வா என்று என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.  எனவே எனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டோம் என்று ராஜ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொலையாளிகளை கைது செய்து வந்த தனிப்படையினரை டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனா, போலீஸ் சுப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

Categories

Tech |