Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் முத்துக்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு காவியா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது காவியா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அகம்பாக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |