Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதுமுக நடிகைகளால் எனக்கு பட வாய்ப்பு குறைந்ததா?… அஞ்சலி விளக்கம்…!!

நடிகை அஞ்சலி புதுமுக நடிகைகளின் வருகையால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்துள்ளதாக பரவிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் .

தமிழ் ,தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அஞ்சலி தற்போது வெப் தொடர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவரது நடிப்பில் அதிக அளவு திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதற்கு காரணம் புதுமுக நடிகைகளின் வருகையால் பெரிய நடிகைகளுக்குள் நடக்கும் போட்டி என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதுகுறித்து நடிகை அஞ்சலி அளித்துள்ள விளக்கத்தில், ‘சினிமா துறையில் நிறைய நடிகைகள் வந்து விட்டனர்.

 

நடிகைகளுக்குள் நடக்கும் போட்டியால் எனக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். நான் சினிமா துறையில் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. யாருடனும் சண்டை வைத்துக்கொள்ள மாட்டேன். என் மீது யாரும் குறைகூற முடியாது. அனைத்து சக நடிகைகளுடன் எனக்கு நல்ல நட்புறவு இருக்கிறது. எந்த கதாபாத்திரத்தில் அவர்கள் நன்றாக நடித்திருந்தாலும் அவர்களை போனிலோ நேரிலோ வாழ்த்துவதை வழக்கமாக வைத்திருக்கிறேனே தவிர பொறாமை பட மாட்டேன்’ என கூறியுள்ளார்.

Categories

Tech |