அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். முன்னதாக 2022-23 ஆம் வருடத்திற்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் 18ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு அவர்கள் இளங்கலை படித்து முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒரு லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. மேலும் புதுமைப்பெண் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கியுள்ளார். சிறப்பு விருந்தினராக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டுள்ளார். அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், சேகர் பாபு, அன்பில் மகேஷ் போன்ற முன்னிலை வகித்துள்ளனர். டெல்லி முதல் மந்தி அரவிந்த் கெஜ்ரிவால் 26 தகைத்தால் பள்ளிகளையும் 15 மந்திரி பள்ளிகளையும் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தால் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும் பாலின சமத்துவம் ஏற்படும். மேலும் குழந்தை திருமணங்கள் குறையும் பெண்கள் அடங்கி போக தேவையில்லை ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படவில்லை. அது அரசின் கடமையாகும் நிமிர்ந்த நன்னடை, மேற்கொண்ட பார்வை கொண்ட பெண்களை கல்வியின் துணைகொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடன் இருப்பேன். மேலும் நன்றாக படிக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் வீட்டிற்குள் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இது மாற வேண்டும் தந்தை கூறிய கடமை உணர்வுடன் பேசுகின்றேன் மாணவர்களை வளர்ந்தெடுக்கவே நானும் அரசும் இருக்கின்றோம். பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது சமூக நீதி என்பது சலுகை அல்ல அரசின் கடமை பெண் கல்வி ஊக்குவிக்கப்படும்போது சமத்துவம் நிலைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.