அரசு பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை செப்டம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2,3,4 வருடம் பயிலும் சுமார் 1.10 லட்சம் மாணவிகள் பயனடைந்து இருக்கின்றார்கள். இந்த சூழலில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை பெற இந்த திட்டத்திற்கு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற விரும்பும் மாணவிகள் கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1 முதல் 11ஆம் தேதி வரை www.puthumaipenn.tn.gov.in விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது பற்றி கூறப்பட்டிருப்பதாவது உயர் கல்வி பயிலும் மாணவிகள் இணையதளத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில் கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள் இதற்காக நவம்பர் 11ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அந்த முகாம்களில் மாணவிகள் தவறாமல் ஆதார் அட்டை, மாற்று சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தை நிறைவு செய்யும் முறையில் சந்தேகம் இருந்தால் சமூக நல இயக்குனராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.