புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் வேப்பூர் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் பயனடைதுள்ளார்கள்.
நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியில் சேர்வதற்காக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைதான திமுக அரசு புதுமைப்பெண் என்று மாற்றி அமைத்தது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தங்களது உயர்கல்வியை தொடர்வதற்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற 5-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட ரூபாய் ஆயிரத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்து பயனடைந்துள்ளனர்.