புதுமையான கதையம்சம் கொண்ட படங்களை கொடுக்கும் இயக்குனர் செல்வராகவன் அடுத்ததாக இளம் நடிகரை வைத்து படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ் திரைப்பட உலகில் மிகவும் தனித்துவமான இயக்குனர் செல்வராகவன் ஆவார். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் -என்ன, காதல் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே என்று என்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ,சந்தானம் நடித்த மன்னவன் வந்தானடி,போன்ற படங்கள் சில வருடங்களுக்கு முடிவடைந்த நிலையில் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றன.
இவர் தற்போது அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக தெரியவந்தது. ஆனால் தனுஷ் அடுத்த அடுத்த வேறு இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதால் அவரால் செல்வராகவன் படத்தில் தற்போது நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடிக்க செல்வராகவன் திட்டமிட்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்க நடிகர் கவுதம் கார்த்திக்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.