தொக்கு செய்ய தேவையான பொருள்கள்:
கொத்தமல்லி தழை – 1 கப்
புதினா – சிறிது கட்டு
மிளகாய்வற்றல் – 5
வடவம், புளி – தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் கொத்தமல்லி தழையையும், புதினாவையும் சுத்தம் செய்து நன்கு காய வைக்கவும். பின் பாதி காய்ந்ததும், அதனை வெறும் வாணலியில் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் வடவம், வர மிளகாய் சேர்த்து வறுத்து, பின் மிக்ஸி ஜாரில் புளி, உப்பு, வதக்கிய கொத்தமல்லி தழை மற்றும் புதினாவையும் சேர்த்து அரைக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்து கலவைகளை சேர்த்து கிளறி, ஈரப்பசை இல்லாமல் வதக்கி எடுத்தால் சுவையான தொக்கு தயார்.