Categories
தேசிய செய்திகள்

புதுவையில் இன்று மட்டும்… 328 பேருக்கு தொற்று.. மொத்த எண்ணிக்கை 6,995 ஆக உயர்வு …!!

புதுச்சேரியில் இன்று மட்டும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,995 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற  சில வாரங்களாக 50,000ஐ  தாண்டி செல்கிறது. நேற்று மட்டும் 60 ஆயித்திற்கும் மேலானோர்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 17,51,555 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று வரை எடுத்த சதவிகித கணக்குப்படி, இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 70.77 ஆகவும், பலியானோர் சதவீதம் 1.96 ஆகவும், சிகிச்சை பெற்று வருபவர்களின் சதவீதம் 27.27 ஆகவும் உள்ளது. இதுவரை 2,76,94,416 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கின்றன. புதுவையில் இன்று மேலும் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 6,995 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |