Categories
தேசிய செய்திகள்

புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தால்…. அவர்தான் பொறுப்பு…. நாராயணசாமி ஓபன் டாக்….!!!!

புதுச்சேரியின் முன்னாள் முதல்வரான நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது “கொரோனா தொற்றால் நாட்டின் வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரானால் இன்னும் அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. முன்பே கரோனா தொற்றின் முதல் 2 அலைகளில் அதிகளவில் புதுச்சேரி மக்களை இழந்துள்ளோம். இந்த ஒமிக்ரான் தொற்றானது வேகமாகப் பரவக்கூடியது. இந்நிலையில் தேவையே இன்றி புத்தாண்டு கொண்டாட்டத்தின் பேரில் புதுச்சேரிக்கு பல மாநிலங்களைச் சேர்ந்த மக்களை வரவழைத்து, கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இது சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயலாகும். புதுவையில் கொரோனா பரவல் இன்னும் அதிகமானால் அதற்கு முதல்வரான ரங்கசாமிதான் பொறப்பேற்க வேண்டும். இதுவரையிலும் புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதாரத்துறையோ, மாநில நிர்வாகமோ ஒமிக்ரான் வந்தால் மக்களை காப்பாற்றுவதற்கான கட்டமைப்புகளை இன்னும் உருவாக்கவில்லை” என்று தெரிவித்தார்

Categories

Tech |