நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களிலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி புதுவை காரைக்காலில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தமிழக கல்வி வாரியம் கொடுக்கும் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.