Categories
மாநில செய்திகள்

புதுவையில் மழை வெள்ள சேதம்…. மத்தியகுழு ஆய்வு …. முதல்வருடன் ஆலோசனை…..!!

தமிழகம், புதுவையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கரையோரம் உள்ள கிராமங்கள் நீர்மூழ்கி, ஆயிரக்கணக்கான நிலங்கள் சேதமடைந்தது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் சேதமடைந்ததை ஆய்வு செய்ய மத்திய குழுவை புதுச்சேரிக்கு அனுப்ப வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

அதன்படி மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் ஷர்மா தலைமையில் மத்திய வேளாண்துறை ஐ.டி. பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை மண்டல அதிகாரி ரணஞ்செய்சிங் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பு செயலாளர் வரப்பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட குழு நேற்று மாலை  புதுவையில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்ட  வந்தார்கள். அவர்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் கருத்தரங்க அறையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், அனைத்து துறை செயலர்கள் மற்றும்  இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் மத்திய குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய குழுவினர் கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து மழை வெள்ளத்தால் சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய குழு அங்கிருந்து புறப்பட்டு சட்டசபை வளாகத்திற்கு சென்று முதல்வர் ரங்கசாமி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய முதல்வர், மத்திய அரசு புதுவைக்கு மழை வெள்ள நிவாரணமாக ரூ.3 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை மந்திரிக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளேன் என்று அவர் கூறினார். அதன் பிறகு இன்று காலை புதுவையில் இருந்து புறப்பட்டு பாகூர் உள்ளிட்ட பகுதியில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.

Categories

Tech |