Categories
மாநில செய்திகள்

புதுவையை சேர்ந்த பெண்ணுக்கு புதிய கொரோனா… கடுமையாகும் கட்டுப்பாடு…!!!

புதுவையை சேர்ந்த பெண் ஒருவருக்கு புதிய வைரஸ் தொற்று இருப்பதால் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி லண்டனில் இருந்து வந்த கொரோனா பாதித்த பழனியில் பக்கத்தில் அமர்ந்து வந்த புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால் புதுச்சேரி முழுவதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

Categories

Tech |