புதுச்சேரியில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு ஒரு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை புதுச்சேரி அரசும் எடுத்து வருகிறது. முககவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி உத்தரவு பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வரை மேலும் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,151ஆக அதிகரித்துள்ளது. இதில், 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் 553 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.