Categories
தேசிய செய்திகள்

புதுவை: இது ஆதாரமற்ற குற்றசாட்டு…. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு…..!!!!!

தென்னிந்திய வணிக மற்றும் தொழில் அவையின் சென்னை கிளைமாநாடு புதுவையில் நேற்று நடைபெற்றது. அந்த மாநாட்டை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் பேசியதாவது “மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் புதுச்சேரி வருகை என்பது ஒருமைல்கல்லாக இருக்கும். அவர் பல வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்க இருக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்ட இருக்கிறார். ஆகவே இது ஒரு சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருக்கும். இதற்கிடையில் புதுவை மாநிலமானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா வருகையை வளர்ச்சி திட்டங்களுக்கான வருகையாக மட்டுமே பார்க்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் புதுச்சேரியின் வளர்ச்சியை விரும்பாதவர்களாகதான் இருக்க முடியும்.

இதில் மகான் அரவிந்தரின் 150-வது ஆண்டுவிழாவில் அமித்ஷாபங்கேற்கிறார். புதுச்சேரி மண்ணில் பல்வேறு ஆண்டுகாலம் வாழ்ந்த ஆன்மிகவாதி, சுதந்திர போராட்ட வீரர் அரவிந்தர் ஆவார். புதுவையில் புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் தொற்றாக மாறி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனிடையில் நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி எவ்வகையிலும் 4வது அலையால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. குழந்தைகளுக்கு பள்ளிகளிலும், சுகாதாரநிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

எனினும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் தேவை ஏற்படுமானால் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்” என அவர் கூறினார். அதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம், புதுவையில் கவர்னர் வாயிலாக பாஜக ஆட்சியை கொண்டு வர திட்டமிடுவதாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுவது தொடர்பாக கேட்டதற்கு, நான் இந்த மாநிலத்தின் கவர்னராக ஆக்கப்பூர்வமான எந்த கோப்பு வந்தாலும் ஒப்புதல் அளிக்கிறேன். நான் என்னுடைய பணியை செய்து கொண்டு இருக்கிறேன். ஏதாவது கூற வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை தவிர்த்து ஆக்கப்பூர்வமானதாக பார்க்க வேண்டும் என சிரித்துக்கொண்டே அவர் பதிலளித்தார்.

Categories

Tech |