கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் அரசு இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் ? என்பது குறித்தெல்லாம் ஆலோசித்தனர். இதன் பின்னர் முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு உயிரிழந்தவர்களின் அனைத்து குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள வீடுகள் அனைத்துக்கும் ரூபாய் 700 மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். கொரோனா நிவாரண நிதியாக பொது நிவாரண நிதிக்கு 9.16 கோடி வந்துள்ளது என்று தெரிவித்தார்.