Categories
உலக செய்திகள்

புது கண்டுபிடிப்பு… இனி சாப்பிட கஷ்டப்படாதீங்க…. வந்து விட்டது “கோஸ்க்”…!!

மூக்கை மட்டும் மறைக்கும்  வகையில் புதுவிதமான முககவசம்  ஒன்றை  தென் கொரியாவின்  அட்மன்  நிறுவனம் வடிவமைத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பரவிவரும் கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக முகக் கவசம் என்பது நம் அனைவரின் வாழ்வின் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது.
அதிலும் வித்தியாசமான முகக் கவசங்கள் வெளியாகி நம்முடைய கவனத்தை ஈர்த்து வந்த நிலையில், தற்போது மூக்கை மட்டும்  மறைக்கும் வகையிலான முகக் கவசம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனை முகக்கவசம் என்று சொல்வதைவிட மூக்குக் கவசம் என கூறுவது சரியாக இருக்கும்.

தென்கொரியாவை சேர்ந்த அட்மன்  என்ற நிறுவனம் இந்த முக  கவசத்தை வடிவமைத்துள்ளது. மூக்கு என பொருள் தரும்” கோ” என்ற கொரியன் சொல்லையும் ” மாஸ்க்”  என்ற ஆங்கிலச் சொல்லையும் இணைத்து இந்த புதிய வகை முகத்திற்கு” கோஸ்க் ” என பெயரிடப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து கொண்டு பல சாதாரண செயல்களை செய்வது சிரமமான ஒன்றாக  மாறியுள்ளது.  இந்நிலையில், அதிலும் குறிப்பாக சாப்பிடும்போது, அருந்தும்போது அடிக்கடி  முககவசத்தை கழற்றி  வைக்க வேண்டியுள்ளது.

இதனால்  முககவசத்தில்   கிருமிகள் கூட பரவும் வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் சாப்பிடும்போது, மற்றும் அருந்தும்போது  மூக்கை  மட்டும்   மூடிக்கொண்டு இருக்குமாறு இந்த முகக்கவசம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |