தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் திமுகவினர் செயல்பாடுகளை எதிர்த்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சென்னை சோழிங்கநல்லூரில் கழிவறையை துடைப்பம் கொண்டு சுத்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து அண்ணாமலை இந்த செயலுக்கு பாராட்டுக்கள் வந்தாலும், வழக்கம்போல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அண்ணாமலை சுத்தம் செய்த கழிப்பறையானது இதுவரை பயன்படுத்தாத கழிவறை என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் அந்த புகைப்படத்தில் கழிவறையை சுற்றியுள்ள ரூப் தாள்கள் மற்றும் கதவு புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ரூப் தாள் கூட இன்னும் கிழிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் யாருமே பயன்படுத்தாத அந்த கழிப்பறையை ஏன் சுத்தப்படுத்த வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுசா ரிவிட் அடிச்ச டோர், ஸ்டிக்கர் கூட கிழிக்காத UV மைக்கா, யூஸ் பண்ணாத புது டாய்லெட்ட க்ளீன் பண்றாராம்ல ஆடு…
இதே வேலைய சுமந்த் மாமாவையும், @sumanthraman திரிபாதி நாராயணனையும் @Narayanan3 செய்ய சொல்லு பார்க்கலாம் pic.twitter.com/emClexAbSG
— ஜெகதீஷ்.கோ (@Jaisajoints) October 7, 2021