தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான மதராசரபட்டினம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்தவர். அதன் பிறகு தாண்டவம், தெறி, தங்க மகன், 2.0 பல படங்களின் நடித்துள்ளார். எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
இதனையடுத்து எமி ஜாக்சன் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர். இவர் காஸிப் கேர்ள் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் இந்த காதல் ஜோடி தற்போது இத்தாலி நாட்டுக்கு டேட்டிங் சென்று உள்ளனர். அங்கு தனது காதலனுக்கு எமி லிப் லாக் கிஸ் கொடுத்த புகைப்பட இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் எமி ஜாக்சன் விதவி ஏ.எல்.விஜய் இயக்கம் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.