Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

புது காதல்கதை… இன்று வெளியாகும் முசாபிர்… மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா இயக்கம் முசாபிர் ஆல்பம்பாடல் இன்று வெளியாகின்றது.

சினிமா பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த “3” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷை பிரிந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா முசாபிர் என்ற ஆல்பம்பாடலை இயக்கி வருகின்றார்.

இப்பாடலின் ஷூட்டிங்கானது ஹைதராபாத்தில் முடிவடைந்துள்ளது. இப்பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று முசாபீர் ஆல்பம்பாடல் வெளியாக உள்ளது. இதற்காக ஐஸ்வர்யா நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளை முசாபீர் பாடல் வெளியாகின்றது என பதிவிட்டுள்ளார். இதனுடன் ஷூட்டிங்கில் நடந்த வீடியோ சிலவற்றையும் பகிர்ந்துள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

Categories

Tech |