Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

புது காதல் கதை.. “முசாபிர் புரோமோவை வெளியிட்ட ஐஸ்வர்யா”… வேற லெவல்ல இருக்கு…!!!

மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா முசாபிர் பாடலின் புரோமோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகிய 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்விற்கு பின்னால் ஐஸ்வரியா முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மீண்டு வந்த ஐஸ்வர்யா மீண்டும் படப்பிடிப்பில் இறங்கினார். பின் முசாபிர் பாடல் வெளியாக இருந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு காய்ச்சல், தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பாடல் வெளியாகவில்லை. பின் டீசர் வெளியானது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மீண்டு வந்தார் ஐஸ்வர்யா. தற்போது பாடலின் புரோமோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அனிருத் பாடிய இந்த புரோமோ சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Categories

Tech |