Categories
கிரிக்கெட் விளையாட்டு

புது கேப்டனுடன் CSK…. பலம், பலவீனம் என்ன ?

CSK வின் பலம்,  பலவீனம்:

சென்னை அணியை பொறுத்த வரை அந்த அணியின் வெற்றிக்கு காரணம் என்று எடுத்துக்கொண்டால் அதற்க்கு முழு காரணம் டோனியின் கேப்டன்சி என்றே கூறலாம். அவர் இதுவரை சென்னை அணிக்காக நான்கு கோப்பைகள் வென்று கொடுத்துள்ளார். ஆனால் இந்த 2022 வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது கேப்டன் பதவில் இருந்து விலகுவதாக அறிவித்து,  ஜட்டு வை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL லில் சிறந்த அணி என்று அழைக்கப்பட காரணமாக இருந்த டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது சற்று பின்னடைவு என்றே கூறலாம். ஆனாலும் டோனி அந்த அணியில் ஒரு வீரராக தொடருவதால் எந்த பின்னடைவும் இல்லை என்று புது கேப்டன் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

மற்றப்படி சென்னை அணிக்காக ஆடிய பாப்  டு பிலஸ்ஸிஸ் இந்த ஆண்டு அணியில் இல்லாததும் ஒரு பின்னடைவு தான். முதல் ஆட்டத்தில்மொயீன் அலி ஆட மாட்டார் என்பதும் ஒரு இழப்பு என்றே கூறலாம். மற்ற படி அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ருத்ராஜ் கெய்க்வார்ட், அம்பதி ராயுடு, சிவம் துபே, ராபின் உத்தப்பா, டெவோன் கான்வே, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா(சி)ஆகியோர் கூடுதல் பலம் சேர்ப்பார்கள் என்றும் கூறலாம்.

பவுலிங் பொறுத்தவரை கிறிஸ் ஜோர்டன், பிராவோ, ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவ சாலியான பவுலர்கள் உள்ளனர். மொத்தத்தில் கொல்கத்தா அணிக்கு சவால் அளிக்கும் முழு பலத்துடன் CSK அணி உள்ளது என்றே கூறலாம்.

Categories

Tech |