Categories
சினிமா தமிழ் சினிமா

புது சாதனை படைத்த தல அஜித்தின் “கண்ணான கண்ணே” பாடல்…. இசையமைப்பாளர் இமான் நெகிழ்ச்சி பதிவு….!!!!

அஜித்-சிவா ஆகிய இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. இதில் ஹீரோயினியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2019-ல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரியதாக பேசப்பட்டது.

இத்திரைப்படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் தற்போது யூடியூபில் 200 மில்லியன் (20 கோடி) பார்வையாளர்களை கடந்து உள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் இமானுக்கு தேசியவிருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி இந்த பாடலின் இசையமைப்பாளர் டி.இமான் தன் டுவிட்டர் பக்கத்தில் “கடவுளின் பூமியிலுள்ள எல்லா தந்தைகளுக்கும் இப்பாடல் சமர்பணம்” என தெரிவித்துள்ளார். இப்பாடலை தாமரை எழுத, சித் ஸ்ரீராம் பாடினார்.

Categories

Tech |